‘ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் கடும் பதிலடி!
இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’வில் 26 தீவிரவாதிகளை வீழ்த்தியது.
இந்தியாஅண்மை
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் நள்ளிரவில் துல்லிய தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 9 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலடியாக பாகிஸ்தான் பிரதமர் இந்தியா மீது கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


