iQOO 15: அக்டோபரில் அறிமுகம்! 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே
iQOO 15 அக்டோபர் 2025ல் சீனாவில் அறிமுகமாகிறது. 7000mAh பேட்டரி, Snapdragon 8 Elite Gen 5, 144Hz டிஸ்ப்ளே என சக்திவாய்ந்த அம்சங்கள் காத்திருக்கின்றன.
அண்மைடெக்


சீன ஸ்மார்ட்போன் பிராண்டான iQOO, தனது புதிய ப்ளாக்ஷிப் மொபைல் iQOO 15-ஐ அக்டோபர் 2025ல் சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராகிறது. இந்தியா உள்ளிட்ட உலகளாவிய வெளியீடு நவம்பர் நடுப்பகுதியில்எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடல் Snapdragon 8 Elite Gen 5 பிராசஸர் மற்றும் 7000mAh பேட்டரி உடன் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது 6.85-இஞ்ச் 2K Samsung flat display மற்றும் 144Hz refresh rate உடன் வெளியாகும்.
புதிய மாடலில் வயர்லெஸ் சார்ஜிங், IP68/IP69 நீர்-தூசி எதிர்ப்பு சான்றிதழ், மற்றும் ultrasonic fingerprint sensorஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. சிகப்பு (Red) மற்றும் வெள்ளி (Silver) என இரண்டு நிறங்களில் வெளியாகும்.
இந்த மாடலின் விலை இந்தியாவில் சுமார் ₹60,000 முதல் ₹65,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iQOO 15, அதன் சக்திவாய்ந்த கேமிங் மற்றும் செயல்திறன் அம்சங்களால், பிரீமியம் மொபைல் பிரிவில் புதிய சவாலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


