தீபாவளி 2025: பச்சை பட்டாசு & நேர கட்டுப்பாடு

தமிழ்நாடு அரசு தீபாவளி நாளில் காலை 6–7 மணி, மாலை 7–8 மணிக்கே பட்டாசு வெடிக்க அனுமதி.

அண்மைதமிழகம்

Melbin

10/16/20251 நிமிடங்கள் வாசிக்கவும்

சென்னை: தமிழ்நாடு அரசு தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பு நேரத்தை கட்டுப்படுத்தி, காலை 6–7 மணி மற்றும் மாலை 7–8 மணி வரை மட்டுமே அனுமதித்துள்ளது. பச்சை பட்டாசுகள் (Green Crackers) பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், கோயில்கள் அருகே வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் உச்சநீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. TNPCB, பள்ளிகள் மற்றும் NGC மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. தீயணைப்பு துறைகள் அவசரநிலைகளுக்குத் தயாராக உள்ளன.

🚦 போக்குவரத்து அறிவிப்பு:

தீபாவளி நாளில், தாம்பரம் மற்றும் சென்னை அருகே Traffic Diversion அமலும். அக்டோபர் 17–18 மற்றும் 21–22 தேதிகளில் முக்கிய சாலைகள் வழிச்செலுத்தல் மாற்றப்படும். அரசு மக்களை பாதுகாப்பாக, பொறுப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.