லோகா (Loka: Chapter 1 – Chandra) – மலையாள சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் ரசிகர்களை கவர்ந்தது
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகா (Loka: Chapter 1 – Chandra), இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் படமாக பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


மலையாள சினிமா எப்போதும் கண்டெண்ட் மற்றும் குவாலிட்டியில் தனித்துவம் பெற்றது. அதற்கு சமீபத்திய உதாரணம் லோகா (Loka: Chapter 1 – Chandra). டொமினிக் அருண் இயக்கிய இந்தப் படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தியிருப்பதாலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கல்யாணி பிரியதர்ஷன், சந்திரா என்ற சூப்பர் பவர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாம்பயர் ஜானரை நாட்டுப்புறக் களத்துடன் கலந்து, தனித்துவமான சூப்பர் ஹீரோ கதையை படம் சொல்லுகிறது. நஸ்லன் நாயகனாக கல்யாணியை காதலிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார். சாண்டி மாஸ்டர் வில்லன் வேடத்தில் வலுவான நடிப்பை வழங்கியுள்ளார்.
முதல் நாளிலேயே 250 திரையரங்குகளில் வெளியான லோகா, ரசிகர்கள் வரவேற்பால் 325 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டது. தமிழக உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்று தமிழிலும் படம் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.


தொழில்நுட்ப ரீதியாக, நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பீஜாயின் இசை, அதிரடி காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக கல்யாணியின் ஆக்ஷன் சீன்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
👉 லோகா (Loka: Chapter 1 – Chandra) படம், உள்ளூர் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகவும், இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோ பிரபஞ்சத்தில் ஒரு புதிய அத்தியாயமாகவும் திகழ்கிறது.


